மட்டக்களப்பில் இஹல கனியம நீர்க்கட்டமைப்பு திறப்பு

மட்டக்களப்பில் இஹல கனியம நீர்க்கட்டமைப்பு திறப்பு

வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படும் வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பு மற்றும் கல்வெட்ட கனியம பாலத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (02) மட்டக்களப்பு நவகிரி ஆறு பகுதியில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மேலதிகமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும் என்பதுடன், விவசாயிகளின் விசேட வேண்டுகோளாக இருந்த, மூன்று பருவங்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனூடாக, இரண்டு பருவங்களுக்கு நெல் பயிரிடவும், மூன்றாவது பருவத்தில் மற்றொரு பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இத்திட்டமானது, சுமார் ஒரு வருட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டதில் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். 45 மில்லியன் செலவில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )