மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

கர்நாடகவில் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது

கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்பவர் 26 வயது மனைவி மற்றும் கைக்குழந்தையும் ஹீலலிகே என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த வாரம் சங்கர் வேலையிலிருந்து வீடு திரும்பிய போது அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார்.

இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து சங்கருடன் தகராறு செய்துள்ளார்.

இதுபோன்றுதான் சம்பவதினத்தன்று சங்கர் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்து, மனைவியின் தலையை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )