
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பஞ்சவர்ணக் கிளி திருட்டு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பஞ்சவர்ணக் கிளி திருட்டு ஒன்று திருடப்பட்டுள்ளது .
குறித்த பறவை கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளது, இது மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கூண்டு பராமரிப்பாளர் மறுநாள் காலை சாவியுடன் கூண்டைத் திறக்கச் சென்றபோது, பாதுகாப்பு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பின்னர் மிருகக்காட்சிசாலையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்
பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் கூண்டிற்குள் இருந்த நீலம் மற்றும் மஞ்சள் பஞ்சவர்ணக் கிளிகளில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது.
பின்னர், அதன் நிர்வாகம் ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

