மருத்துவ குணம் நிறைந்த நுங்கு

மருத்துவ குணம் நிறைந்த நுங்கு

மற்ற மரங்களைவிட ஏராளமான பயன்களை கொண்டதாக பனை மரங்கள் விளங்குகின்றன. ஒரு பனை இருந்தால் அதைச்சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இது ஒரு புறமிருக்க, கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த நுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது. நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை, வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்ப நிலையை சமநிலை செய்கிறது.

கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத்தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்று நோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )