
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்கள் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

