
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(15) பிணை வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (15) முற்பகல் அவர் முன்னிலையான போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

