குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.04.30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2025.04.08ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து குழு நிலையில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் மூன்றாவது மதிப்பீட்டின்போது குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.03.01ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )