அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு                     இனி இடமில்லை என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் நீண்ட காலமாக பரிணாம வளர்ச்சியடைந்து வருவதாகவும் அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்த்துவரப்பட்ட ,கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட போது ,கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முக்கிய குற்றக் கும்பலாகச் செயல்பட்ட கெஹெல்பத்தர பத்மே கமாண்டர் சலிந்து உட்பட ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை கைது செய்ய நாங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தோம்.

பொலிஸார் , ஐஜிபி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட ஒரு குழு நீண்ட காலமாகத் திட்டமிட்டு, அவர்களைக் கைது செய்து இந்த நாட்டிற்குக் அழைத்துவர இந்தோனேசிய போலீஸாருடன் சுமார் ஏழு நாட்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்த நாட்டில் நீண்ட காலமாக பரந்து வியாபித்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

அரசியல்வாதிகள் சிலர் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைப் பயன்படுத்தினர்.

மேலும் அரசியல்வாதிகள் அவர்களிடமிருந்து பல்வேறு நன்மைகளையும் பெற்றனர்.

இந்த குற்றக்குழுக்களின் சொத்துக்கள் சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களையும் நாங்கள் இப்போது கண்டுபிடித்துள்ளோம்.

அதனால்தான், கைது செய்யப்பட்ட இந்தக் குழுக்கள் மீது முழுமையான விசாரணை நடத்த ஐஜிபி இப்போது குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் விரிவான முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் இந்த நாட்டு மக்களை மேலும் ஒடுக்குவதைத் தடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குற்றவாளிகளை கைதுசெய்ய இலங்கை போலீசார் மற்றும் விசேட போலீஸ் குழுவினருடன் இணைத்து செயற்பட்ட இந்தோனேஷிய போலீசாரும் இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு அமைச்சர் ஆனந்த விஜேயபால நன்றி தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேஷியாவின் ஜகார்த்தவில் கைதுசெய்யப்பட்ட கெஹெல் பத்தர பத்மே கமாண்டோ சலித்த , பெக்கோ சமன் உள்ளிட்ட குற்றவாளிகளுடன் பெக்கோ சமனின் மனைவி மற்றும் அவர்களது குழந்தையும் கைதுசெய்யப்பட்டனர் .

மறுநாள் 28 ஆம் திகதி பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை இந்தோனேஷியாவிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )