யுக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொலை

யுக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொலை

யுக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy)சுட்டுக் கொல்லப்பட்டார்.

யுக்ரைனின் மேற்கு நகரமான (Lviv)லிவிவ்வில் அவர் கொல்லப்பட்டார்.

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண்ட்ரி பருபியை கொரியர் வேடமணிந்த ஒருவர் பின்தொடர்ந்து அவரை அணுகி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு செயதிகள் கூறுகின்றன .

இது ஒரு கொடூரமான கொலை எனத் தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர்
செலன்ஸ்கி சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

54 வயதான பருபி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் , 2016 ஏப்ரல் முதல் ஓகஸ்ட் 2019 வரை நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார். அத்துடன் 2013-14 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுத்த போராட்டங்களின் தலைவர்களில் ஒருவராக அவர் செயற்பட்டார்.

2014 ஓகஸ்ட் வரை உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவையின்; செயலாளராகவும் செயற்பட்டார்.

ரஷ்ய ஆதரவாளரான யுக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பின்னர் 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கிய யூரோமைடன் இயக்கத்தில் பருபி ஒரு முக்கிய நபரானார்.

யானுகோவிச் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவர் யுக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரானார்.

அவர் தற்போதைய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )