நுவரெலியா பதுளை பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம் ,                       சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம் , சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நுவரெலியா பதுளை பிரதான வீதியின் மாநகரசபை மைதானத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இதன்போது அந்த வீதியின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன

பிரதேச மக்களுடன் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து முறிந்து வீழ்ந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்

இந்நிலையில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றமையால் அதிகமான இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள், மின்கம்பிகள் மீது விழுந்து மின்தடைகள் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.

அத்துடன் நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு வீதி சேதமடைந்து காணப்படுவதால் மண்சரிவு சமிக்ஞைகள் வீதியோரத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன

சமிக்ஞைகளை கவனித்து இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்விழிப்புடன் இருக்குமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )