மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

நேற்று அகமதாபாதில் இடம்பெற்ற பாரிய விமான விபத்தையடுத்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று அவசரமாக தரையிறங்கியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த

AI 379 விமானம் இவ்வாறு தரையிறங்கியதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது

அவசரகால ப்ரோடோகால் படியினூடாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விமானத்தினுள் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனைக்கு பிறகு விமானத்தில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தததாகவும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன

இன்று காலை 9:30 ற்கு ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட குறித்த விமானம் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )