மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் இலங்கை விமானப் பாதைகள் மாற்றம்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் இலங்கை விமானப் பாதைகள் மாற்றம்

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக, பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால்
இலங்கை விமான பாதைகள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

லண்டன் உட்பட ஐரோப்பிய வழித்தடங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழித்தட மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் கால அளவு நீட்டிக்கப்படலாம் என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்று லண்டனில் இருந்து கொழும்புக்கு செல்லும் UL504 விமானம் மாற்றுப்பாதை காரணமாக எரிபொருள் நிரப்புவதற்காக தோஹாவிற்கு திருப்பி விடப்படும் எனவும் அதே நேரத்தில் கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் UL501 விமானமும் பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்க்க மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ளது
1979 (இலங்கைக்குள்);
+94 11 777 1979 (சர்வதேச);
whatsapp +94 74 444 1979

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )