
களனி கங்கையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது மதிக்கத்தக்க 5அடி 4 அங்குலம் உயரமுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

