சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை 10 நாட்களுக்கு பூட்டு

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை 10 நாட்களுக்கு பூட்டு

நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை இன்று (14) முதல் ஜூன் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது

இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தச் சாலை மூடப்படுகிறது.

சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன ஓட்டிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக செல்லும் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் சாலையைப் பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )