உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை ஒப்பந்தம்1 கிலோ கல் உப்பு 180 ரூபாய்

உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை ஒப்பந்தம்1 கிலோ கல் உப்பு 180 ரூபாய்

உப்பின் விலையைக் குறைக்கும் நோக்கில் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகளுக்கு உட்பட்டு உப்பு விநியோகிக்கப்படும் என இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த தீர்மானம் செயற்படுத்தப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது

உப்பு இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் சமீபத்தில் தளர்த்தியதால், போதுமான அளவு உப்பு கையிருப்பு நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும், , இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிகபட்ச சில்லறை விலை வரம்புகளுக்கு உட்பட்டு நாடுமுழுவதும் விநியோகிக்கும் நடவிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ,1 கிலோ கல் உப்பு 180 ரூபாய் ,
1 கிலோ உப்புத் தூள் 240 ரூபாய் ,
400 கிராம் உப்புத் தூள் ரூ. 120 ஆகிய விலைகளில் நாடளாவிய ரீதியில் உப்பை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற சில நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் பிறகு நாடு முழுவதும் நுகர்வோர் குறித்த விலைகளில் பொதிசெய்யப்பட்ட உப்பை வாங்க முடியும் என இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )