
மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் விமான விபத்தில் பலி
பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் நேற்று முன்தினம் (12) சுமார் 242 பயணிகளுடன் அருகில் இருந்த ஜே.பி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் மாணவர் விடுதி கட்டிடத்தில் விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியதில் 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES India

