
மெதகமயில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
குடும்ப தகராறு காரணமாக கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (14) மெதகம பொலிஸ் பிரிவின் பலகசர பகுதியில் பதிவாகியுள்ளது.
கடையொன்றுக்கு அருகில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது .
அதன்படி, சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸ் அதிகாரிகள் குழு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மெகதம பகுதியில், மக்கந்தவின்னவில் வசித்து வந்த 38 வயதுடைய பெண் ஆவர்.
மேலும் கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

