புனித அந்தோனியார் தேவாலய விசேட ஆராதனையையொட்டி கொச்சிக்கடை பகுதியில் காலை முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

புனித அந்தோனியார் தேவாலய விசேட ஆராதனையையொட்டி கொச்சிக்கடை பகுதியில் காலை முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த விசேட ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டியே இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாளை காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )