
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
Majdalzoun நகரில் இரண்டு தனித்தனியான வான்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதனுடன், தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் அமைந்துள்ள Qalila நகரமும் மற்றொரு வான்தாக்குதலின் இலக்காக மாறியுள்ளது.
இந்த தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

