
மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் பெண்ணொருவர் பலி
கம்பஹா மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பமுனுவ சந்தியில் நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

