போதைப்பொருளுடன் 13 பேர் கைது

போதைப்பொருளுடன் 13 பேர் கைது

கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் இன்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண் ஒருவரை உட்பட 13 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குலான பொலிஸாரும் இலங்கை கடற்படையும் இணைந்து இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 13,820 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 180 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )