ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் போர் முடிவுக்கு வரும்

ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் போர் முடிவுக்கு வரும்

தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்திகதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.

இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )