
அடுத்த சில நாட்களுக்கு ஓரளவு மழை
அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 MMக்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சூரியன் தெற்கே தெரியும் வகையில் நகரும் என்பதால், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கை நெருங்கிய அட்சரேகைகளில் சூரியன் நேரடியாக மேலே காணப்படும் .
மிரிஸ்ஸ, கம்புருகமுவ, மாத்தறை, தேவுந்தர, கந்தர மற்றும் தலல்ல ஆகிய பிரதேசங்களில் இன்று மதியம் 12:08ற்கு சூரியன் உச்சத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

