
பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து இரண்டு நேரங்களில் நிறுத்தப்படும்
பாடசாலை நாட்களில் காலை 6:30 முதல் காலை 7:45 வரையிலும் மற்றும் காலை 11:30 முதல் பிற்பகல் 2:30 வரையிலும் கனிமப் போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பாடசாலை வேன் ஒன்று ,மணல் டிப்பர் லொறியில் மோதிய விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.
இந்த இரு நேரங்களிலும் கனிமப் போக்குவரத்து வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தால் வீதி ஓரங்களில் நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணிய பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் கூறினார்.

