சில சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்

சில சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.என்.டி சில்வா பொலனறுவை பிரிவிலிருந்து பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.கே.ரத்நாயக்க பாணந்துறை பிரிவிலிருந்து சீதாவாக்கபுர பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க பொலிஸ் ஊடகப்பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பொலனறுவை பிரிவுக்குப் பொறுப்பாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )