ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 16 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )