
NPPக்கு வாக்களித்து கட்சி உறுப்புரிமை SJB இழந்த சுசில் குமார
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்குத் தெரிவான நாரஹேன்பிகே சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொலன்னாவ நகரசபையின் தலைவர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் இன்று கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானங்களுக்கு இணங்காது தேசிய மக்கள் சக்திக்கு சார்பாக செயற்பட்டமையையிட்டு , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையிலிருந்து சுசில் குமார நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை முதன்முறையாகக் கூடிய கொலன்னாவ நகரசபையில் வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகளின் போது ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேறிய போது , சுசில் குமார மட்டும் சபையில் இருந்தவாறு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தார்.
அவரின் இந்த நடவடிகக்கையால் கொலன்னாவ நகரசபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்குச் சென்றது.
இதனையடுத்து , கொலன்னாவ நகரசபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின். தம்மிக்க விஜயமுனி தேர்ந்தெடுக்கப்பட்டார், சமன் செனவிரத்ன உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

