பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து  விபத்து ; 10 பேர் பலி

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து ; 10 பேர் பலி

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நோக்கி பயணித்த பஸ் ஒன்று டயர் வெடித்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )