எகிப்து வழியாக வரும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

எகிப்து வழியாக வரும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

போர்நிலைமையால் இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக செல்ல முடியும் என இஸ்ரேலிய தூதரகம் முன்னர் தெரிவித்திருந்தது.

இருப்பினும், நேற்று எகிப்திய எல்லைக் கடவை வழியாகச் சென்று, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாமல் நாட்டின் கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குச் சென்ற நான்கு இலங்கையர்களில் ஒருவர் எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எகிப்துக்கான இலங்கைத் தூதருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது என இலங்கைகான இஸ்ரேல் தூதர் நிமல் பண்டார இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்

எந்த நிலைமையிலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது காலாவதியான விசாக்களுடன் வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது, அவர்கள் அவ்வாறு பயணிக்க முயன்றால், அவர்கள் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என்று நிமல் பண்டார சுட்டிக்காட்டினார்.

இதனைடிப்படையில் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு செல்லமுடியாது , அவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று தூதர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு புறப்படுவதற்காக தொடர்புடைய ஆவணங்களை சேகரிக்க மேலும் இரண்டு இலங்கையர்கள் நேற்று தூதரகத்திற்கு வந்ததாக தூதர் கூறினார்.

இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டின் அரசாங்கம் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கைகான இஸ்ரேல் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலும் நேற்று ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது, மேலும் ஈரானில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

கடந்த 13 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஐ எட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், தாக்குதல்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )