
அனுராதபுரம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவரின் நண்பர்கள் ஐவர் கைது
அனுராதபுரம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்களாக , துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவரின் நண்பர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டனர் .
அனுராதபுரம் திருப்பனே கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது .
28 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக அனுராதபுரம் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் ஐவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சந்தேக நபர்களிடம் ஐஸ் போதைப்பொருட்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் எனவும் அவர்களுக்கு இடையே போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடுஇடம்பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம் சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர் .
மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

