
தெவுந்தர மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்களின் உடல்கள் சற்று முன்னர் மீட்பு
தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் இருந்த காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட ஒரு மீன்பிடிக் கப்பலும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடிக் கப்பலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன
தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட கப்பலில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது,
மேலும் அந்தக் கப்பல் ஒரு வணிகக் கப்பலில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு மீனவர் மீட்கப்பட்டு தரையிறக்கப்பட்ட நிலையில் ஏனைய , மற்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டது .
சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பெல் 412 ஹெலிகாப்டரை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் விமானப்படைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அங்கு ஹெலிகப்டர் அனுப்பப்பட்டது.
சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், கடற்படை ஒரு தேடல் கப்பலை ஒன்றையும் அனுப்பியது.
இந்நிலையில் இவ்வாறு 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

