
வரியின்றி இலங்கைக்கு வரும் டெஸ்லா கார்கள் மற்றும் அமெரிக்க உயர்தர மின்சார வாகனங்கள்
டெஸ்லா கார்கள் உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்களை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பல்வேறுகட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி வரியின்றி அனுமதிப்பதற்கான ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போதே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியும் 20 சதவீதமாக குறைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பேச்சுவார்தைகளில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டால் டெஸ்லா, ஃபோர்ட், செவ்ரோலெட் மற்றும் ஜீப் (Tesla, Ford, Chevrolet and Jeep ) போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர வாகனங்கள் இலங்கை சந்தைக்குள் வரியின்றி இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கத் தரப்பிலிருந்து வந்த இந்த முன்மொழிவுக்கு இலங்கை அரசு முழுமையான ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
முன்மொழிவை படிப்படியாக பரிசீலிப்பதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் போது இலங்கை அரசு கூறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திட்ட முன்மொழிவு செயற்படுத்தப்பட்டால் டெஸ்லா வாகனங்களின் விலை பட்டியல் எவ்வாறிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி ,
டெஸ்லா மொடல் 3 – $44,130 – ரூ. 13,239,000
டெஸ்லா மொடல் Y – $46,630 – ரூ. 13,989,000
டெஸ்லா மொடல் S – $86,630 – ரூ. 25,989,000
டெஸ்லா மொடல் X – $91,630 – ரூ. 27,489,000
டெஸ்லா மொடல் – $79,990 – ரூ. 23,997,000
என கணக்கிடப்பட்டுள்ளது.

