
ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்குவெளியுறவு அமைச்சின் விசேட அறிவிப்பு
ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களின் விமானப் பயணத்தை எளிதாக்க இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து உரிய ஏற்பாடுகளை செயதுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் எந்தவொரு இலங்கையரும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை டெலிகிராம் சேனல் அல்லது பின்வரும் அவசர எண்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
: +98 901 014 4557, +98 912 810 9115, +98 912 810 9109. என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தையும் பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
+98 939 205 5161, +98 991 205 7522 +98 936 636 0260 ஆகிய
தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்புகொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

