புதிய விமானம் கட்டுநாயக்கவிலிருந்து மாலைதீவு நோக்கி பறந்தது

புதிய விமானம் கட்டுநாயக்கவிலிருந்து மாலைதீவு நோக்கி பறந்தது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த ஏர்பஸ் A330-200 விமானம், தனது முதல் பயணத்தை மேற்கொண்டு இன்று மாலைதீவிற்கு சென்றுள்ளது .

இன்று பிற்பகல் 01.48ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்தை நோக்கி
பயணித்ததாக ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார் .

இந்த புதிய அகன்ற இடவசதி கொண்ட ஏர்பஸ் விமானம் கடந்த 4ஆம் திகதி காலை பிரான்சில் உள்ள ஏர்பஸ் விமான உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்கள் நிறைவடைந்த பின்னர், விமானம் அதன் முதல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )