
செம்மணி புதைகுழி விசாரணையில் பிரித்தானியா தலையிட வேண்டும் – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்உமா கோரிக்கை
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள ஆதரவளிக்குமாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரிட்டன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட செம்மணியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களின் பேரழிவு தந்த ஒரு நினைவூட்டல் என அவர் X பதிவிட்டுள்ளார்
இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச பங்காளிகளுடன் சேர்ந்து, முழுமையான விசாரணைக்கு பிரிட்டன் அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மிக்கு கடிதமொன்றை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

