
இளைஞர் படையணிக்காக புதிய போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு
இளைஞர் படையணிக்காக உள்வாங்கப்பட்ட 26 புதிய போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (16) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேசிய இளைஞர் படையணியின் தலைவர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு

