
ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண்ணொருவர் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இருந்த பெட்டியின் வாயிலினூடாக இறங்குவதற்கு இறங்குதளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டியினூடாக இறங்குவதற்கு முற்பட்ட வேளையில் ரயில் நகர்ந்ததால் குறித்த பெண் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியாசலையில் சேர்த்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

