
இரண்டு மாதங்களில் 10.84 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் 12.16 பில்லியன் பெறுமதியான ஐஸ் கைப்பற்றப்பட்டது
கடந்த இரண்டு மாதங்களில் 1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ரூ. 10.84 பில்லியன் எனவும் , ஐஸ் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ரூ. 12.16 பில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் இவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன .
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட 4 சோதனை நடவடிக்கைகளில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டன .
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களின் அளவு தொடர்பில் நேற்று பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது.

