செம்மணி புதைகுழியில் மேலும் மூன்று மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இதுவரை 27 மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி புதைகுழியில் மேலும் மூன்று மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இதுவரை 27 மனித எச்சங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது மேலும் மூன்று மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A. ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ,பண்டாரகே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் நேற்றைய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 27 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன .

இவற்றில் 22 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்படுள்ளன .

சட்டவைத்திய அதிகாரியால் புதைகுழி அகழ்வு இடம்பெறும் இடத்தில் மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி மண் மாதிரி பரிசோதனை நடவடிக்கைகள், industrial technology institution கொழும்பு நிபுணர்களால் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

செய்மதி படம் மூலம் மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டும் இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தன ,

அந்த இடங்களும் நேற்று நீதிமன்ற உத்தரவிற்கமைய துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )