கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை தொடர்பில் 12 பேர் கைதுஇஷாரா செவ்வந்தி தொடர்பிலும் தகவல்கள்

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை தொடர்பில் 12 பேர் கைதுஇஷாரா செவ்வந்தி தொடர்பிலும் தகவல்கள்

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களை கைதுசெயதுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தற்போது தலைமறைவாகியிருக்கும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என அவர் தெரிவித்தார் .

கைதுசெய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் மூலம் இஷாரா செவ்வந்தி பற்றிய சில தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

கனேமுல்ல சஞ்ஜீவவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் கொலைச் சம்பவம் இடம்பெற்ற நீதிமன்றத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்தமையே கொலை இடம்பெற காரணம் என அவர் தெரிவித்தார் .

இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுமென தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )