இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை கண்டித்து ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி ” அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 16 பேர் காயமடைந்து உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )