ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாளை இலங்கைக்கு விஜயம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாளை இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வொல்கர் டர்க் நாளை (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர் வெளியுறவு அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளர் கண்டிக்குச் சென்று அங்கு புனித தந்ததாதுவை வணங்கவுள்ளதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதான பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )