கனமழை காரணமாக யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி!

கனமழை காரணமாக யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டப வளாகத்தில் நேற்று மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000 , 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு , நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக , மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் , நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள் , அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் , பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் , நிகழ்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.

தம்பிதுரை பிரதீபன்










CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )