ஈரான் மீது தாக்குதல் ; அமெரிக்காவில் மக்கள் போராட்டம்

ஈரான் மீது தாக்குதல் ; அமெரிக்காவில் மக்கள் போராட்டம்

ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக கடந்த 13-ந்திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்கா நேற்று (22) தாக்குதல் நடத்தியது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும்.

ஈரானில் உள்ள அணு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவை தகர்க்கப்பட்டு உள்ளன. ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம் என பேசினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்தபடி கோஷம் போட்டனர். ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும், ஈரானை தொடாதே, டிரம்ப் ஒரு போர் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடியும் சென்றனர்.

ஈரானுடன் மோதலை தொடங்கிய மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றை சுட்டி காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், பாதுகாப்புக்காக போலீசார் பல இடங்களில் குவிக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )