இஸ்ரேல் -ஈரான் ஒப்பந்தத்தை மீறியதால் கடும் கோபம் கொண்ட டிரம்ப்

இஸ்ரேல் -ஈரான் ஒப்பந்தத்தை மீறியதால் கடும் கோபம் கொண்ட டிரம்ப்

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார் .

நேற்று மாலை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவித்தபோது மகிழ்ச்சியடைந்த டிரம்ப், அது நடைமுறைக்கு வரவிருந்ததால் இரவு வரை விழித்திருந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறுவதாக அறிந்தபோது அவர் கோபமடைந்ததாகவும் அமெரிக்கா வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN தெரிவித்துளளது .

இதேவேளை ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த.போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த போது இஸ்ரேலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனால் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு வலுக்கட்டாயமாக பதிலடி தாக்குதலை தெஹ்ரானில் தாக்குதலை மேற்கொள்ள , இஸ்ரேல் இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் “ஈரானின் போர் நிறுத்த மீறல்களுக்கு” பதிலளிக்கும் விதமாக தெஹ்ரான் அருகே ஒரு ரேடார் வரிசையைத் தாக்கியதாக நெதன்யாகு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, உள்ளூர் நேரப்படி காலை 07:06ற்கு ஒரு ஏவுகணையையும், காலை 10:25ற்கு மேலும் இரண்டு ஏவுகணைகளையும் இஸ்ரேலின் ஈரான் வீசியதாக BBC செய்தியில் கூறப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேசிய பிறகு இஸ்ரேல் “மேலும் தாக்குதல்களில் இருந்து விலகியதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு அமைவாக ,ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் எனவும் ட்ரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்றும், ஆனால் இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்தினால் தெஹ்ரான் தாக்குதல்களை நிறுத்தும் எனவும் ஏற்கனவே ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )