
மித்தெனியவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழப்பு
மித்தெனிய தொரகொலயா பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை

