
உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக CIDயில் முறைப்பாடு
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளாதார பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே கசிந்ததாக வெளியான செய்திகளை விசாரிக்க, பரீட்சைகள் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளது .
பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கடந்த வாரம் இது தொடர்பாக முறைப்பாடு செய்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் கசிந்துள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டன.
இவ்வாறான முறைப்பாடு குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணை நடத்தியதுடன் அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாக இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லையென என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

