புத்தளம் – கற்பிட்டி முகத்துவார கடற்கரையில் இருந்த 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகள்

புத்தளம் – கற்பிட்டி முகத்துவார கடற்கரையில் இருந்த 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகள்

புத்தளம் – கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில்
சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட குறித்த போதை மாத்திரைகளை கடற்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )