
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் விசா அடுத்த மாதம் 31ஆம் திகதிவரை நீடிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மறு நுழைவு விசாவுடன் நாட்டிற்கு வந்தவர்களின் விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு விசாவில் நாட்டிற்கு வந்தவர்கள் மறு நுழைவு விசா காலம் காலாவதியானாலும், அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை அவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது .
அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது .

