
உலகில் நீளமான பெயரை கொண்ட நாடு எது தெரியுமா ?
உலக நாடுகள் பெரும்பாலும் அதன் சுருக்கமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அதற்கு உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் சற்று நீளமானதாக இருக்கும்.
சில நாடுகள் தாங்கள் ஜனநாயக நாடு அல்லது சுதந்திர நாடு அல்லது கூட்டாட்சி ஜனநாயக நாடு உள்ளிட்டவற்றை குறிப்பதற்காக பெயர்களை நீளமாக வைத்துள்ளன. ஆனால் உலக அரங்கில் அவை சுருக்கமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
அந்த வகையில் உலகில் மிக நீளமான பெயரை கொண்ட நாடாக பிரிட்டன் இருந்து வருகிறது.
இதனுடைய அதிகாரப்பூர்வ பெயர் The United Kingdom Of Great Britain And Northern Ireland என்பதாகும். இதில் 45 எழுத்துக்கள் உள்ளன.
இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka என்பதாகும். இதில் 37 எழுத்துக்கள் உள்ளன. இதே போன்று குறிப்பிடத் தகுந்த வகையில் நேபாள நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் 32 எழுத்துக்களை கொண்டதாகும்.
Federal Democratic Republic of Nepal என்பது நேபாளத்தின் அதிகாரப்பூர்வ பெயராக உள்ளது. இதேபோன்று தென்கொரியா நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் என்பதாகும். இதில் 32 எழுத்துக்கள் உள்ளன.

